/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி விளையாட்டு போட்டி
/
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி விளையாட்டு போட்டி
ADDED : பிப் 28, 2025 10:18 PM
ஊட்டி; ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி விளையாட்டு போட்டி நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு செயலாளர் முனைவர் கோமதி வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் அருண் தலைமை வசித்தார்.
மாவட்ட எஸ்.பி., நிஷா போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்களுக்கு விளையாட்டு மிக முக்கியம். மாணவர்களின் முன்னேற்றத்தில் விளையாட்டு, பெரும் பங்கு வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி, உடல் வலிமையை விளையாட்டு மேம்படுத்துவதோடு, சிந்தனையை கூர்மையாக வைத்திருக்கும். இதனால், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய சூழலில், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக அவசியமானது. பள்ளி மாணவர்கள் முதல், முதியோர் வரை போதை பொருள் குறித்த விழிப்புணர்வு சென்று சேர வேண்டும்.
அனைத்து கல்லுாரிகளிலும் காவல் துறை சார்பில், 'போதைக்கு எதிரான சங்கம்' துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் போதை பொருட்களை தடுக்க முடியும்,'' என்றார்.
விளையாட்டு அலுவலர் சிவபிரசாத் போட்டிகளை நடத்தினார். போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.