/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மாரியம்மன் கோவில் திருத்தேர் நிகழ்ச்சி; இன்று துவங்கி ஒரு மாதம் கோலாகலம்

ADDED : மார் 13, 2025 09:08 PM
ஊட்டி; ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா இன்று துவங்கி, ஒரு மாதம் காலம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை பல வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நிகழ்ச்சி இன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 16ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் ஏப் ., 11ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் தேர் முகூர்த்தக்கால் நடுதல், 14ம் தேதி பகல் , 12:00 மணிக்கு தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 16ம் தேதி மஞ்சள் நீராட்டு கொடியிறக்கம் , 18ம் தேதி விடையாற்றி உற்சவம் உள் பிரகாரத்தில் அம்மன் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஒரு மாதம் காலத்தில் பல்வேறு சமூகத்தினரின் உபயத்தில், ஆதிபராசக்தி, துர்கை, பராசக்தி, காமாட்சி அம்மன், காமதேனு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் அம்மன் வீதி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.