/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி போலீஸ் குடியிருப்பு: உள்துறை செயலர் ஆய்வு
/
ஊட்டி போலீஸ் குடியிருப்பு: உள்துறை செயலர் ஆய்வு
ADDED : மே 03, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டியில் போலீஸ் குடியிருப்பில், மாநில உள்துறை செயலர் ஆய்வு செய்தார்.
பந்தலுார் அருகே, மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில், மாநில உள்துறை செயலர் அமுதா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அங்குள்ள சோதனைச்சாவடிகளில் பணி புரிபவர்களுக்காக, புதிய கட்டடங்களை கட்ட உத்தரவிட்டார்.
நேற்று மாலை, ஊட்டி வந்த அவர், போலீசார் குடியிருப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.