/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா சந்திப்பில் வாகன நெரிசல் :பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊட்டி போலீசார்
/
தொட்டபெட்டா சந்திப்பில் வாகன நெரிசல் :பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊட்டி போலீசார்
தொட்டபெட்டா சந்திப்பில் வாகன நெரிசல் :பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊட்டி போலீசார்
தொட்டபெட்டா சந்திப்பில் வாகன நெரிசல் :பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊட்டி போலீசார்
ADDED : மே 05, 2024 11:30 PM

ஊட்டி;ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் பல நாட்களாக தொடரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஊட்டியில் சீசன் துவங்கி, வரும், 10ம் தேதி முதல், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
'வெளி மாநில மற்றும் மாவட்ட சுற்றுலா வாகனங்களுக்கு, 'இ-பாஸ்' அவசியம்,' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தாலும், இனி வரும் நாட்களில், பார்வையாளர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்தின் அழகை பார்வையிட விரும்புகின்றனர். இதனால், 12 சுற்று பஸ்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் தொட்டபெட்டா செல்வது வழக்கம்.
தொட்டபெட்டா சந்திப்பில், நான்கு ரோடுகள் பிரிவதால், ஊட்டி, கோத்தகிரி, கெந்தொரை மற்றும் தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து, அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் பயணிப்போர், ஊட்டி பஸ் நிலையத்தை அடைய, குறைந்தப்பட்சம், ஒரு மணி நேரத்தை செலவிட வேண்டிய நிலை இருந்தது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தொட்டபெட்டா சந்திப்பில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, வளைவுகளில் வாகனங்கள் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், ஓரிரு நிமிடங்கள் நெரிசல் இருந்தாலும், சாதாரண நாட்களை போலவே, கால தாமதம் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. உள்ளூர் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.