/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதைகளை திறந்து விடுங்கள்; ஹிந்து முன்னணி கலெக்டரிடம் மனு
/
பாதைகளை திறந்து விடுங்கள்; ஹிந்து முன்னணி கலெக்டரிடம் மனு
பாதைகளை திறந்து விடுங்கள்; ஹிந்து முன்னணி கலெக்டரிடம் மனு
பாதைகளை திறந்து விடுங்கள்; ஹிந்து முன்னணி கலெக்டரிடம் மனு
ADDED : மார் 02, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; 'பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழாவிற்கு வரும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது,' என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இம்மாதம், 7ம் தேதி முதல் நடக்கிறது. விழாவிற்கு, தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழா நடைபெறும் நாட்களில் மலை பாதைகளை திறந்து விட வேண்டும். தவிர, பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.