ADDED : ஜூன் 28, 2026 04:40 PM

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனம் மற்றும் அதனை சார்ந்த கிராமங்கள், வியாபார நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள், திறந்த நிலையில் இருக்கும் கிணறுகளில் தவறி விழுந்து பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. திறந்த நிலை கிணறுகளில் மேல் மூடி அமைக்க வேண்டும். என, வனத்துறை உத்தரவிட்டது. உத்தரவிடும் சமயத்தில் மட்டும் ஒரு சில கிணறுகளில் மேல் மூடி அமைக்கின்றனர். பெரும்பாலான கிணறுகளில் அமைக்காமல் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகின்றனர். வனவிலங்குகள் கிராமப்புறங்களில் சுற்றித்திரியும் போது, மழையில் கிணறுகளில் தண்ணீர் அளவு அதிகரித்து, வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சூழல் ஏற்படும்.
எனவே, திறந்த நிலையில் உள்ள கிணறுகளில், மேல் மூடி அமைக்க ஊராட்சிகள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
