/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் நவீன 'ரோபோடிக்' ஆய்வகம் திறப்பு மாணவர்களுக்கு பயிற்சி
/
அரசு பள்ளியில் நவீன 'ரோபோடிக்' ஆய்வகம் திறப்பு மாணவர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளியில் நவீன 'ரோபோடிக்' ஆய்வகம் திறப்பு மாணவர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளியில் நவீன 'ரோபோடிக்' ஆய்வகம் திறப்பு மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 04, 2025 12:24 AM

கூடலுார், ; கூடலுார், புளியாம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, நவீன 'ரோபோடிக்' ஆய்வகம் திறக்கப்பட்டது
கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், பெங்களூருவை சேர்ந்த 'மைக்ரோ லேன்ட்' அறக்கட்டளை நிதி உதவியுடன், 'லேர்னிங் லிங்க்' அறக்கட்டளை சார்பில், 22 லட்சம் ரூபாய் செலவில், மாணவர்களுக்கு 'ரோபோடிக் தொழில்நுட்பம், 3டி பிரிண்டர், சோலார் பேனல்' இயக்கம் குறித்து, பயிற்சி அளிக்க வசதியாக நவீன ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார்.
கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன், மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை நிதியாளர் கல்பனா கார் ஆகியோர் ஆய்வகத்தை திறந்து வைத்து, மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் உபகரணங்களை பார்வையிட்டு பாராட்டினர்.
'லேர்னிங் லிங்க்' அறக்கட்டளை துணை தலைவர் அமுதா கூறுகையில், ''கூடலுாரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் குறித்து, பயிற்சி அளித்து உபகரணங்கள் உருவாக்க வசதியாக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கி இப்பகுதி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூடலுார் மற்றும் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளிகள், முதல்- மைல், ஊராட்சி பள்ளி, புத்துார் வயல் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் குறித்து பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.