/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு
/
ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு
ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு
ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு
ADDED : ஆக 20, 2024 10:11 PM
ஊட்டி : 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தில் நஞ்சநாடு ஊராட்சியை இணைக்க கூடாது,' என, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி நகராட்சி, 1866-ம் ஆண்டு உருவானது. தற்போது, நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வரும்.
இதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கான, அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்த திட்டத்தில், ஊட்டி நகராட்சியுடன், கேத்தி பேரூராட்சி மற்றும் இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேத்தி உட்பட அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நஞ்சநாடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தில், நஞ்சநாடு ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.