/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
/
தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
ADDED : ஏப் 04, 2024 10:55 PM
குன்னுார்:'லோக்சபா தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். வரும், 19ம் தேதி விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்,'' என, தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், குன்னுாரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. ''தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் முருகேசன் தலைமை வைத்து பேசுகையில், வரும், 19ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்கும் வகையில், 19ம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவின்படி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுப்பு தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.
இதன்படி, 'குன்னுார் பெட்போர்டு தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் - 9443566160; குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் -9952080800; ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூடுதல் தொடர்பு அலுவலக தொழிலாளர் உதவி ஆணையர் லெனின்-8778865427; கோத்தகிரி காமராஜர் சதுக்கம் தொடர்பு அலுவலக மற்றும் கூடலுார் தொடர்பு அலுவலகங்களின் தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப் 9443845052,' ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், தோட்ட தொழிலாளர் சங்கத்தினர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.

