/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்ய உத்தரவு; பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்ய உத்தரவு; பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்ய உத்தரவு; பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்ய உத்தரவு; பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : ஜூன் 30, 2024 08:57 PM
குன்னுார்;'குன்னுாரில் ஆற்றோர ஆக்கிமிப்பு கடைகளை, பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி செய்ய வேண்டும்,' என, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, 2019ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பல கடைகள் இடிக்கப்பட்ட நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே கடைகளை இடிக்க 'நோட்டீஸ்' வழங்கப்பட்ட போது, சில ஆளும்கட்சி நிர்வாகிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மழையின் காரணமாக, ஆற்றோரத்தில் இருந்த டீக்கடையின் ஒரு பகுதி சிறிது, சிறிதாக இடிந்து அந்தரத்தில் தொங்கியது. கடைகள் நடத்த வருவாய் துறையினர் தடை விதித்தனர்.
மழை அதிகரிக்கும் போது, பேரிடர் பாதிப்பு ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருவாய் துறை சார்பில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடையை நடத்துபவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ் குமார் கூறுகையில், ''ஏற்கனவே டீக்கடை இடிந்து அந்தரத்தில் உள்ள நிலையில், ஆற்றோர பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும், பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் சீல் வைக்கப்படும், தடையாணை கால அவகாசம் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.