/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி ஏற்பாடு தீவிரம் ஐந்து டன் பழ வகைகளில் பல்வேறு அலங்கார பணி

ADDED : மே 23, 2024 02:49 AM

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நடக்க உள்ளதால் பூங்கா பொலிவாக காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவு விழாவாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 64வது பழ கண்காட்சி நாளை துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.
இதனையொட்டி, அன்னாசி, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை, உட்பட, 20 வகையிலான, 5 டன் பழங்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், 'கிங்காங், வாத்து, நத்தை' உட்பட, 9 பிரம்மாண்ட வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், தோட்டக்கலை துறையின், 150வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பழங்களால், '150' என்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக தோட்டக்கலை துறையின் அரங்குகள் உட்பட தனியார் அரங்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
பூங்காவில், கடந்த ஜன., மாதம் நடவு செய்த, 'இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு செல்சியா, ஆஸ்டர், டேலியா, ஜின்னியா, பிளக்ஸ், ரோஜா,' உட்பட, 30க்கும் மேற்பட்ட வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது.