/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆராய்ச்சி மையத்தில் நெல் நடவு பணி
/
ஆராய்ச்சி மையத்தில் நெல் நடவு பணி
ADDED : செப் 03, 2024 02:24 AM

கூடலுார்:கூடலுார் புளியாம்பாறை நெல் ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சி மற்றும் விதை நெல்லுக்காக நாற்று நடவு பணி நடந்து வருகிறது.
கூடலுார் புளியம்பாறையில், கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின், வீரிய ஒட்டுநெல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான புதிய நெல் வகைகளை நடவு செய்து, ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். அதேபோன்று கூடலுாரில் அதிகம் விளையக்கூடிய 'பாரதி, கோ--50' உள்ளிட்ட நெல் வகைகளின், விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பாண்டு, பருவமழை சரியான நேரத்தில் எதிர்பார்த்ததை விட பெய்ததால், மையத்தின் உழவு பணிகளும் மேற்கொண்டு, ஆராய்ச்சிக்கும், விதைக்கும் விதை நெல் விதைத்தனர். தொடர்ந்து, நெல் நாற்றுகளை பறித்து, நடவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'இங்கு ஆராய்ச்சிக்காகவும், விதை நெல்லுக்காகவும், நெல் பயிரிட்டு வருகிறோம். கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், நெல் நடவு பணிகள் தாமதமாக நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டு சரியான நேரத்தில் பருவமழை பெய்ததால், நெல்லுக்கு தேவையான பாசன நீர் கிடைத்து வருகிறது. தற்போது, நாற்றுகளை பறித்து நடவு செய்து வருகிறோம். நெல் நாற்றுகள் நன்றாக வளரவும், களைச் செடிகளை எளிதாக அகற்றும் வகையில், போதிய இடைவெளி விட்டு, நாற்றுகள் நடவு செய்வதன் வாயிலாக அதிக மகசூல் கிடைக்கும்,' என்றனர்.