/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புவி வெப்பமயமாதல் தலைப்பில் ஓவிய போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
/
புவி வெப்பமயமாதல் தலைப்பில் ஓவிய போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
புவி வெப்பமயமாதல் தலைப்பில் ஓவிய போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
புவி வெப்பமயமாதல் தலைப்பில் ஓவிய போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 31, 2024 11:35 PM
ஊட்டி;'புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு,' என்ற தலைப்பில் நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் அறிக்கை:
உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு, 'புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு,' என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட உள்ளது. ஓவியத்தில் திறன் பெற்றுள்ள கல்லுாரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
வரும், 4ம் தேதி காலை, 10:00 மணியளவில் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் மாற்று முறை தீர்வு மையத்திற்கு ஓவியம் வரைவதற்கான எழுது பொருட்கள், இதர பொருட்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். மேலும், மாணவர் தங்கள் கல்லுாரி அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும்.
ஓவியம் வரையும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும், 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு தகுந்த பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு, 0423--2444277, 94888-25698 மற்றும் 90922-22202 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

