/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பலா காய் ருசிக்க பகல் நேரத்தில் வந்த யானை
/
பந்தலுார் பலா காய் ருசிக்க பகல் நேரத்தில் வந்த யானை
பந்தலுார் பலா காய் ருசிக்க பகல் நேரத்தில் வந்த யானை
பந்தலுார் பலா காய் ருசிக்க பகல் நேரத்தில் வந்த யானை
ADDED : ஏப் 20, 2024 12:13 AM

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் பால காய்களை ருசிக்க ஒற்றை யானை வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு சாலை ஓரத்தில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இதனை ஒட்டி தேயிலை தோட்டம் மற்றும் புதர் பகுதி உள்ள நிலையில், இப்பகுதியை சேர்ந்த ஜான் என்பவரது வீட்டு தோட்டத்திற்கு ஒற்றை யானை பகலில் வந்துள்ளது.
தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் இருந்த பலா காய்களை ருசித்த யானை, குடியிருப்பு பகுதிக்குள் வர முயன்றது. பொதுமக்கள் யானையை விரட்ட முயற்சித்து முடியாத நிலையில், சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சப்தம் எழுப்பி யானையை, தேயிலை தோட்டம் வழியாக அருகில் உள்ள புதர் பகுதிக்குள் துரத்தினர்.
யானை மீண்டும் இந்த பகுதிக்குள் வராமல் இருக்கும் வகையில், யானை கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கோடை காலம் காரணமாக, உணவு தேடி காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இங்கு பலா சீசன் உள்ளதால், யானைகள் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தோட்டத்துக்கு அதிகளவில் வருகின்றன. அதனால், மக்கள் முன்னெச்சரிக்கையும் இருக்க வேண்டும். முடிந்தளவில் பலா மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை வந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கெடுக்க வேண்டும்,' என்றனர்.

