/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பண்ணாரி அம்மன் கோவில் பூ குண்டம் தேர் திருவிழா
/
பண்ணாரி அம்மன் கோவில் பூ குண்டம் தேர் திருவிழா
ADDED : மார் 28, 2024 04:56 AM
கோத்தகிரி, : கோத்தகிரி அருள்மிகு அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருக்கோவிலில், பூ குண்டம் தேர் திருவிழா, சிறப்பாக நடந்தது.
கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, மலர் வழிபாடு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலை, பூ குண்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திரு வீதிஉலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா, வரும், 1ம் தேதி மறு பூஜையுடன் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர்கள் மற்றும் வழிபாட்டு குழுவினர் உட்பட, மகளிர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.