/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காகித பை தின விழிப்புணர்வு மாணவ, மாணவியர் அசத்தல்
/
காகித பை தின விழிப்புணர்வு மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : ஜூலை 13, 2024 08:39 AM

குன்னுார், :குன்னுார் அருகே அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் சார்பில், 'பிளாஸ்டிக்' ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
ஆண்டுதோறும் ஜூலை, 12ம் தேதி உலக காகித பை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்த காகிதபை தின நாடகத்தில், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகித பைகள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், காகித பைகளால் சுற்றுச்சூழலுக்கான பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 2ம் வகுப்பு மாணவ, மாணவியர் இதற்கான நாடகத்தை அரங்கேற்றினர்.
காகிதங்களை பயன்படுத்தி மரங்கள். பறவைகள், விலங்குகள் போன்று வடிவில், மாணவ, மாணவியர் நடித்து காண்பித்தனர்.
இதில், 'எளிதில் மட்கும் தன்மை கொண்ட பேப்பர் பேகுகள் பயன்படுத்த வேண்டும்; பிளாஸ்டிக்கை முழுமையாக தவிர்க்க வேண்டும்; பேப்பர் பைகள் மட்கும் தன்மை கொண்டதால் உயிர் உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை, ஆசிரியைகள் அனிதா, ரேஷ்மா சுகன்யா செய்திருந்தனர்.