sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முழுமை பெறாத கட்டட பணியால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்

முழுமை பெறாத கட்டட பணியால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்

முழுமை பெறாத கட்டட பணியால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்


ADDED : ஆக 27, 2024 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 02:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், முழுமை பெறாத கட்டட பணியால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதனால், அலுவலகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தவிர, தனியார் வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்த முடியாத நிலை இருந்து வந்தது. நீண்ட நாட்களுக்குப் பின், எஸ்.ஏ.டி.பி.,திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது, பணி நடந்து வருகிறது.

பிரதான சாலையில் இருந்து நீடித்து, அலுவலகத்தை ஒட்டி, 9 மீட்டர் உயரம், 18 மீட்டர் நீளத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடப் பணி, விரைவில் நிறைவடையும் நிலை உள்ளது.

ஆனால், நீடிக்கப்பட்ட இடத்தில், கட்டடத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மண் நிரப்பி சமன் செய்யும் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

மேலும், கட்டுமான பொருட்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், குறிப்பிட்ட இடத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பணியை விரைந்து முடித்து, வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us