/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தந்தை உயிரிழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி
/
தந்தை உயிரிழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி
தந்தை உயிரிழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி
தந்தை உயிரிழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி
ADDED : மே 06, 2024 11:08 PM

கூடலுார்:கூடலுார் அருகே, தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர் தேர்ச்சி பெற்றார்.
கூடலுார் இரண்டாவது மைல் வேடன்வயல் பகுதியை சேர்ந்தவர் தருண். புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்--2 படித்து வந்தார். கடந்த மார்ச் பிளஸ்--2 பொதுத்தேர்வு எழுதினார்.
இந்நிலையில், கம்யூட்டர் அறிவியல் தேர்வுக்கு முதல் நாள், கூடலுார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பணியாற்றி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் தந்தை உலகநாதன், 59, மார்ச், 7ம் தேதி உயிரிழந்தார்.
இதனால், ஈடு செய்ய முடியாத சோகத்தில் இருந்த மாணவரை, உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆறுதல் கூறி, 8ல் தேர்வு எழுத வைத்தனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு, தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்று, வெளியிடப்பட்ட பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாணவர் தருண், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடினமான சூழலில், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவரை, குடும்பத்தார் பாராட்டி, கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.