/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா சாலையில் நெரிசல்; போலீசார் மீது பயணிகள் குற்றச்சாட்டு
/
தொட்டபெட்டா சாலையில் நெரிசல்; போலீசார் மீது பயணிகள் குற்றச்சாட்டு
தொட்டபெட்டா சாலையில் நெரிசல்; போலீசார் மீது பயணிகள் குற்றச்சாட்டு
தொட்டபெட்டா சாலையில் நெரிசல்; போலீசார் மீது பயணிகள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 14, 2024 11:50 PM

ஊட்டி;ஊட்டி தொட்டபெட்டா சாலையில், மேல் கோடப்பமந்து பகுதியில் உள்ள தனியார் காட்சியகத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளது. ரம்ஜான் பண்டிகையுடன், தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமவெளிப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படை எடுக்க துவங்கியுள்ளனர். வார விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் நகரப் பகுதிகளில் ஊர்ந்து செல்வது தொடர்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் உட்பட, பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவலம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, இரு நாட்களுக்கு முன்பு, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, தொட்டாபெட்டா சந்திப்பு மற்றும் மதுவானா - தாவரவியல் சாலையில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்து சீர்படுத்தியதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதே நேரத்தில், ஊட்டி சேரிங்கிராஸ் - தொட்டபெட்டா இடையே, மேல்கோடப்பமந்து வளைவில் உள்ள தனியார் காட்சியகத்திற்காக, போலீசார் மறைமுக ஆதரவு தெரிவித்து, 'பேரிகார்டு' வைத்துள்ளதாக, உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பஸ் பயணிகள் கூறுகையில், 'சுற்றுலா வாகனங்கள் தனியார் காட்சியகத்திற்குள் எளிதில் நுழைந்து, திரும்பிவர ஏதுவாக, சாலையின் மையப்பகுதியில் பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட வளைவில், ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா வழியாக செல்லும் அரசு பஸ்கள் உட்பட, இதர கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.

