/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் பி.எஸ்.என்.எல்., சிக்னல் 'கட்' தகவல் பரிமாற்றம் இல்லாமல் பயணிகள் திணறல்

ADDED : மே 09, 2024 05:03 AM
குன்னுார், : குன்னுார் மலைபாதை பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுாரை தலைமையிடமாக கொண்டு, பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு சேவை செயல்பட்டு வருகிறது. இங்கு தனியாரை விட, பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை சந்தாதாரர்கள் அதிகம் உள்ளனர். 4 ஜி இணைப்பு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
தற்போது, '2ஜி, 3ஜி நெட்வர்க்' சேவை மட்டுமே இருந்த போதும், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடந்த, 2 நாட்களாக பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு ஏற்பட்டதால் மக்களும், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பர்லியார் பகுதி மக்கள் கூறுகையில்,'பக்காசூரன் மலை பகுதியில் உள்ள டவர் மூலம் மலை பாதைகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சிக்னல் கிடைக்கிறது. தனியார் மொபைல் டவர்கள் இல்லாததால் பல இடங்களில் சிக்னல் கிடைக்காமல், சுற்றுலா பயணிகள் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் இணைப்பு பர்லியார் பகுதிகளில், 2ஜியில் மட்டுமே இருப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் கல்விக்கு தேவையான தகவல் அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர்,' என்றனர்.
எனவே, நீலகிரி மாவட்டத்திற்கு, 4ஜி சேவையை துவக்கவும். மலைபாதையில் மொபைல் சிக்னல் முழுமையாக கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.