/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெருநாய் தொல்லை அதிகரிப்பு பந்தலுார் பகுதியில் மக்கள் அச்சம்
/
தெருநாய் தொல்லை அதிகரிப்பு பந்தலுார் பகுதியில் மக்கள் அச்சம்
தெருநாய் தொல்லை அதிகரிப்பு பந்தலுார் பகுதியில் மக்கள் அச்சம்
தெருநாய் தொல்லை அதிகரிப்பு பந்தலுார் பகுதியில் மக்கள் அச்சம்
ADDED : செப் 27, 2024 11:47 PM

பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லையால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பகுதியில் மீன் மற்றும் கோழி கழிவுகளை திறந்த வெளியில் பலரும் கொட்டி வருவதால், அவற்றை உட்கொள்ளும் தெருநாய்கள் பஜார் பகுதியில் இருந்து வெளியே செல்வதில்லை.
கடைகள் முன்பாக படுத்துக் கொண்டு, காலையில் கடை திறக்க வரும் கடை உரிமையாளர்களை கடிக்க முற்படுவதால், பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும், சாலைகளில் படித்து ஓய்வெடுப்பதால் பாதசாரிகள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சமீபத்தில், திருப்பூர் பகுதியில் சாலையின் குறுக்கே ஓடிய நாயால், பைக்கில் சென்ற கணவன், மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோன்று பந்தலுார் சுற்றுவட்டார பகுதியிலும், தெரு நாய்களால் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன் திறந்த வெளியில் மாமிச கழிவுகளை உட்கொள்ளும் தெரு நாய்களுக்கு, பல்வேறு நோய் தொற்று பரவும் நிலையில் இதனால் வனவிலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை, பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.