/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி சாலையில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சம்
/
ஊட்டி சாலையில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சம்
ஊட்டி சாலையில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சம்
ஊட்டி சாலையில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சம்
ADDED : மார் 11, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் - ஊட்டி சாலையில், அருவங்காடு பகுதியில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் - ஊட்டி சாலையில் அவ்வப்போது, காட்டெருமைகள் உணவு; தண்ணீருக்காக, இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் காட்டெருமை அருவங்காடு பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்தது. வெடிமருந்து தொழிற்சாலை 'கேட்' மூடப்பட்டதால், எம்.ஜி.காலனி வரை நடந்து சென்று தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு சென்றது.
பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவியர் அச்சமடைகின்றனர். வனத்துறையினர் கண்காணித்து, காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும்.