/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பட்டா கொடுத்தும் அளவீடு செய்து தரவில்லை தாசில்தாரிடம் மக்கள் புகார்

ADDED : ஜூலை 03, 2024 02:28 AM
அன்னுார்;'இலவச பட்டா கொடுத்து, ஏழு ஆண்டுகளாகியும் நிலம் அளவீடு செய்து தரவில்லை,' என கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.
அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில் அளித்த மனு :
அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த எங்களுக்கு 2012 மற்றும் 2017ம் ஆண்டு வருவாய் துறையால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய நிலத்தை அளவீடு செய்து தரவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
தற்போது ஊராட்சியில் வீடு இல்லாத, சொந்த இடமில்லாத குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் என பல வீடுகளில் வசித்து வருகிறோம். வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய இடத்தை அளவீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற தாசில்தார் நித்திலவள்ளி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என பொது மக்களிடம் உறுதியளித்தார்.