/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் பகலில் உலா வரும் சிறுத்தை, கரடி அச்சத்துடன் பணிக்கு செல்லும் மக்கள்
/
கிராமத்தில் பகலில் உலா வரும் சிறுத்தை, கரடி அச்சத்துடன் பணிக்கு செல்லும் மக்கள்
கிராமத்தில் பகலில் உலா வரும் சிறுத்தை, கரடி அச்சத்துடன் பணிக்கு செல்லும் மக்கள்
கிராமத்தில் பகலில் உலா வரும் சிறுத்தை, கரடி அச்சத்துடன் பணிக்கு செல்லும் மக்கள்
ADDED : செப் 06, 2024 02:56 AM

குன்னுார்:குன்னுார் கரிமொராஹட்டியில் மீண்டும், கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர்.
குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரிமொரா ஹட்டி, கரோலினா, பெரியார் நகர், வசம்பள்ளம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப காலமாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
அதில், நாய்கள் உட்பட வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை வேட்டையாடி செல்கிறது.
குடியிருப்பு கதவுகளை கரடிகள் உடைத்து உள்ளே சென்று அரிசி, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் உட்கொண்டும் சேதம் செய்தும் செல்கின்றன.
இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி கிராம பகுதிகளுக்குள் வந்து செல்கிறது.
தற்போது பகல் நேரங்களிலும் உலா வருவதால் மக்கள் தேயிலை பறிக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிக்கும் நாள்தோறும் அச்சத்துடன் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சென்று வருகின்றனர். கிராம மக்கள் கூறுகையில், 'கரடியை பிடிக்க கூண்டு மட்டுமே வைத்து அதனுள் தேவையான பொருட்களை வைக்கவில்லை.
திறந்த நிலையில் கண்துடைப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், மீண்டும் உரிய முறையில் கூண்டு வைத்து கரடி, சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.