/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை :நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் மறியல்
/
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை :நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் மறியல்
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை :நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் மறியல்
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை :நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் மறியல்
ADDED : மே 03, 2024 01:18 AM

ஊட்டி:குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி லவ்டேல் கெரடா மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி நகராட்சி, 36வது வார்டு லவ்டேல் கெரடா பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதியடைந்தனர்.
அருகில் உள்ள வனத்திற்கு சென்று ஊற்றுநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்த நிலையில், ஊற்று நீரும் வற்றியதால் செய்வதறியாமல் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பல முறை சென்று புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை கிராம மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் வந்து ஊட்டி -- மஞ்சூர் பிரதான சாலை, லவ்டேல் போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். பிரதான சாலை என்பதால் இருப்புறமும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிராம மக்கள் கூறுகையில், 'கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருக்காக கடுமையாக பாதிக்கப்பட்டோம். நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. கலெக்டரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர்.