/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி; 'பீக் ஹவர்'சில் சாலை பணியால் தொல்லை
/
கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி; 'பீக் ஹவர்'சில் சாலை பணியால் தொல்லை
கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி; 'பீக் ஹவர்'சில் சாலை பணியால் தொல்லை
கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி; 'பீக் ஹவர்'சில் சாலை பணியால் தொல்லை
ADDED : மே 01, 2024 12:36 AM

ஊட்டி:ஊட்டியில் சீசனின் போது நடக்கும் சாலை பணியால், காலை நேரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஊட்டியில் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ஊட்டி -குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில், ஆவின் பகுதி, சேரிங்கிராஸ் தனியார் மருத்துவமனை எதிரில், மழைநீர் கால்வாய் வசதிக்காக பொக்லைன் உதவியுடன் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நேற்று காலையில் நடந்தது.
பிரதான சாலையில் எவ்வித முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணி மேற்கொண்டனர். சீசன் சமயத்தில் 'பீக் ஹவர்'சில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலிருந்து கீழ்நோக்கி வரும் வாகனங்கள்; அதேபோல், கீழிருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி அனுப்பினர். இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், குன்னுார் சந்திப்பிலிருந்து ஊட்டி நகருக்கு வர ஒரு மணி நேரமானது. காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், சைட்சீன் பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு செல்பவர்கள் தாமதமானதால் நடந்து சென்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சீசன் சமயத்தில் பிரதான சாலையில் இதுபோன்று நடக்கும் பணிகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.