/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் புகார்

ADDED : ஜூலை 02, 2024 02:02 AM

கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு கெராடாமட்டம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பிரியா காலனி அமைந்துள்ளது.
இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவை கலந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரியா காலனி ஊர் தலைவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவை கலந்துள்ளனர். இதை செய்தவர்கள் விஷத்தை கலக்க வாய்ப்புள்ளதாக அச்சம் உள்ளது. எனவே, எங்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க, கொடநாடு ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இதே போல, கெராடாமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறத்தில் தடுப்பு சுவர் அமைக்காமல் உள்ளது. இதனால், பார்வையற்றவர் ஒருவர் தவறி விழுந்து காயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி குழந்தைகள் உட்பட, மாற்றுத்திரனாளி கிராம மக்கள் நலன் கருதி, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.