/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : ஜூலை 24, 2024 01:13 AM
ஊட்டி;ஊட்டியில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து, 178 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்காக, துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், 178 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், ஐந்து பயனாளிகளுக்கு தலா, 5,030 ரூபாய் மதிப்பில் மொத்தம், 25 ஆயிரத்து, 150 ரூபாய் மதிப்பிலான மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம், தொகுப்பு நிதியில் இருந்து, ஐந்து பேருக்கு, 1.06 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும், மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கியதற்காகவும், பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரித்ததற்காகவும், கோத்தகிரி குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஊட்டி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தர சான்று வழங்கப்பட்டது.