/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி ; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
/
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி ; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி ; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி ; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 10:23 PM

மேட்டுப்பாளையம்: விவசாய நிலத்திற்கு, உரமாக பயன்படுத்த, பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள, வண்டல் மண்ணை எடுக்க, அரசு அனுமதி வழங்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம், 105 அடியாகும். அணை நிரம்பும் போது, சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு வரை, 30 கி.மீட்டருக்கு ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். பவானி ஆற்றின் இருபக்கம் உள்ள கிளை ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில், தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கும்.
மழை வெள்ளத்தில் அடித்து வந்த வண்டல் மண்கள், ஆங்காங்கே படிந்துள்ளன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 45.93 அடியாக குறைந்துள்ளது. நீரோடைகளிலும், கிளை ஆறுகளிலும், தண்ணீர் வற்றி காய்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில், ஏராளமான அளவில் வண்டல் மண் படிந்துள்ளன. இந்த மண்ணை விவசாய நிலத்திற்கு, உரமாக பயன்படுத்த, விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சிறுமுகை, லிங்காபுரம், சம்பரவள்ளி, பெத்திக்குட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில், 10 அடிக்கு மேல் வண்டல் மண் படிந்துள்ளது என, அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மண்ணால், அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். தற்போது அணையில் 3.52 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள பகுதியில் அதிகளவில் வண்டல் மண் படிந்துள்ளது. எனவே அணையில் தண்ணீர் இல்லாத பகுதிகளில், படிந்துள்ள வண்டல் மண், விவசாய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படும். இந்த மண்ணை கொட்டி, நிலத்தை உழுது பயிர் செய்தால், பயிர்கள் நன்கு செழித்து வளரும். இதனால், விவசாயிகளுக்கு உரச் செலவுகள் மிச்சமாகும்.
மேலும் வண்டல் மண் எடுக்கும் போது, அணையில் தேங்கி நிற்கும் நீரின் அளவு, இரண்டு டி.எம்.சி.,க்கு மேல் உயர வாய்ப்புள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டு, அணையில் தண்ணீர் குறைந்த போது, விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க, அரசு அனுமதி வழங்கியது. அதேபோன்று தற்போதும், வண்டல் மண்ணை எடுக்க, அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

