/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன விலங்குகளை பதம் பார்க்கும் கண்ணாடி துண்டுகள்
/
வன விலங்குகளை பதம் பார்க்கும் கண்ணாடி துண்டுகள்
ADDED : மார் 02, 2025 10:44 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார வனப்பகுதிகளில், கண்ணாடி பாட்டில்களை போடுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதி அமைந்துள்ளது. அந்தபகுதியில் சேரம்பாடி, பிதர்காடு, தேவாலா வனச்சரகங்கள் அமைந்துள்ளன.
இந்த வனப்பகுதிகளை ஒட்டி மக்கள் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ள நிலையில், மதுபிரியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில், காலியாகும் கண்ணாடி பாட்டில்களை, அருகே உள்ள வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
அதில், பெரும்பாலான இடங்களில் பாட்டில் உடைந்து அந்த வழியாக நடந்து செல்லும் மனிதர்கள் கால்களில் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இவ்வழியாக செல்லும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வரும் நிலையில், வன விலங்குகளின் கால்களில் பாட்டில் துண்டுகள் குத்தினால் அவைபாதிக்கப்பட்டு நாளடைவில் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, வனத்துறையினர் இதுபோன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வனப்பகுதிகளில் வீசி எறியப்படும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தவும், பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன் வர வேண்டும்.