/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
(பிட்ஸ் -2) எந்த நிலையில் துாங்குவது நம் உடலுக்கு மிகவும் சிறந்தது?
/
(பிட்ஸ் -2) எந்த நிலையில் துாங்குவது நம் உடலுக்கு மிகவும் சிறந்தது?
(பிட்ஸ் -2) எந்த நிலையில் துாங்குவது நம் உடலுக்கு மிகவும் சிறந்தது?
(பிட்ஸ் -2) எந்த நிலையில் துாங்குவது நம் உடலுக்கு மிகவும் சிறந்தது?
ADDED : ஆக 10, 2024 10:43 PM

மனதிற்கும், உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுத்து, மீண்டும் புத்துணர்ச்சி அடைவதற்கு துாக்கமே அடிப்படை. நம் துாக்கம் முறையானதாகவும் இருக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதியான உறக்கத்திற்கு நாம் எந்த முறையில் துாங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
பொதுவாக நம் முதுகு கீழாக இருக்கும்படி, அதாவது மல்லாக்க படுத்து உறங்குவது சிறப்பானதாக அமையும். இதை 'சவாஸனா' என்று குறிப்பிடுகின்றனர். இந்த முறையில் துாங்கும்போது உங்கள் முதுகு தண்டுவடம் நேர்கோட்டில் இருக்கிறது மற்றும் உடல் எடை அழுத்தம் சீராக இருக்கிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க இது உதவும்.
ஒரு பக்கமாக துாங்குவது:
நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட முறை இதுவாகும். அதிலும் இடதுபக்கமாக தலை சாய்ந்து துாங்குவது நல்ல பலனை தரும். ஆசிட் ரிப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது சவுகரியத்தை தரும். அது மட்டுமல்லாமல் கழுத்து வலி, இடுப்பு வலி, தோள் வலி போன்றவை வராது.
குப்புற படுத்து துாங்குவது:
துாங்கும்போது மூச்சு விடுவதற்கு சிரமம் கொண்டவர்கள் அல்லது குறட்டை பிரச்சினையால் அவதி அடைபவர்கள் இதை முயற்சி செய்யலாம். ஏனெனில் மூச்சுக்குழாய் நேர்கோட்டில் இயங்குவதால் சுமூகமான துாக்கத்தை உறுதி செய்யலாம். ஆசிட் ரிப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்கள் இந்த பொசிஷனை முயற்சி செய்யக் கூடாது.
சுருண்டு படுப்பது:
கருவில் உள்ள சிசு போல சுருண்டு படுத்துக் கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கும், தண்டுவட பிரச்சினை இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். தண்டுவடம், காதுகள், தோள்கள் மற்றும் தொடைகள் ஆகியவை சௌகரியமான நிலையில் இருக்கும்.கால்களுக்கு தலையணை தலைப்பகுதிக்கு மென்மையான தலையணை பயன்படுத்தவும்.
மல்லாக்க துாங்கும்போது முழங்கால்களுக்கு கீழே தலையணை வைத்து துாங்குவது நல்ல சௌகரியத்தை தரும். உடலின் முக்கிய பகுதிகளில் உள்ள வலி மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றுக்கு இது நிவாரணம் தரும். முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கினால் தொடைகள், இடுப்பு, தண்டுவடம் போன்ற பகுதிக்கு நல்ல சௌகரியம் கிடைக்கும். உங்கள் உடலுக்கு எந்த அமைப்பு சரியாக வரும் என்பதை அறிந்து, அதை பின்பற்றவும்.

