/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு
/
உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு
ADDED : மார் 25, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி நிர்வாகம், சீனிவாசா சமூக சேவைகள் அறக்கட்டளை சார்பில் உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீது முன்னிலை வகித்தார். சீனிவாசா அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜன், சில்ட்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது. ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.

