/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டாவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு தாவரவியல் பூங்காவில் பணிகள் ஜரூர்

ADDED : ஜூலை 27, 2024 01:50 AM
ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக, மலர் நாற்றுகள் நடவுப்பணி துவங்கியது.
கலெக்டர் லட்சுமி பவ்யா மலர் நாற்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி முன்னிலை வகித்தார்.
தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசன் செப்., மாதம் தொடங்குவதை முன்னிட்டு, கோல்கட்டா, காஷ்மீர், பஞ்சாப் மற்றும் புனே உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 'இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்னிபா, லுாபின், கேண்டிடப்ட், காஸ்மஸ், பேன்சி, பெட்டுனியா, ஜினியா, ஸ்வீட் லில்லியம், அஜிரேட்டம், கேலண்டுலா, ஹெலிக்ரைசம் மற்றும் சப்னேரியா,' உட்பட, 60 வகையான பல்வேறு மலர் விதைகள் பெறப்பட்டுள்ளன.
15 ஆயிரம் மலர் தொட்டிகள்
ஐந்து லட்சம் வண்ண மலர் செடிகள் இரண்டாவது சீசனுக்காக மலர் பாத்திகளிலம் நடவு செய்யும் பணி; 15 ஆயிரம் மலர் தொட்டிகளில், 'சால்வியா, டெய்சி, டெலிபினியம் மற்றும் டேலியா உட்பட, 30 வகையான மலர் நாற்றுகள் நடவு பணிகளும் நடந்து வருகிறது.
நடுப்பாண்டு நடைபெறும் இரண்டாம் சீசனுக்கு, மூன்று லட்சம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செப்., மற்றும் அக்., மாதங்களில் வருகை புரிவார்கள் என எதிர்பார்ப்படுகிறது.