/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
1.95 லட்சம் மலர் நாற்றுக்கள் சிம்ஸ்பூங்காவில் நடவு
/
1.95 லட்சம் மலர் நாற்றுக்கள் சிம்ஸ்பூங்காவில் நடவு
1.95 லட்சம் மலர் நாற்றுக்கள் சிம்ஸ்பூங்காவில் நடவு
1.95 லட்சம் மலர் நாற்றுக்கள் சிம்ஸ்பூங்காவில் நடவு
ADDED : ஜூலை 13, 2024 08:41 AM

குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக, 1.95 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கடந்த ஏப்., மாதம் முதல் 2.65 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில், ஏப்., மே கோடை சீசனுக்கு அடுத்தபடியாக, அக்., நவ., மாதங்களில், 2வது சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். நடப்பாண்டு சீசனுக்காக, 1.95 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி நேற்று துவங்கியது.
முதற்கட்டமாக பால்சம் மலர் நாற்றுக்கள் பூங்கா முகப்பு பகுதியில் நடவு செய்யப்பட்டது. இப்பணியை குன்னுாரில், தோட்டக்கலை உதவி இயக்குனர் சிபிலா மேரி துவக்கி வைத்தார். தொடர்ந்து, தோட்டகலை பணியாளர்கள், ஊழியர்கள் நாற்றுகளை நடவு செய்து வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்தில் இருந்து விதைகள் வர வரழைத்து, இங்கு உற்பத்தி செய்யப்பட்ட, 'பால்சம், சால்வியா, லுபின், பிளாக்ஸ், பெகோனியா, டெல்பினியம், ஜின்னியா, பேன்ஸி, லில்லியம், அமராந்தஸ்,டேலியா,' உட்பட, 75க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.