/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளஸ்--1 தேர்வு முடிவு தேர்ச்சி விகிதம் அதிகம்
/
பிளஸ்--1 தேர்வு முடிவு தேர்ச்சி விகிதம் அதிகம்
ADDED : மே 15, 2024 12:09 AM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
'அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில், மாவட்டத்தில், 1,166 மாணவர்கள், 1,127 மாணவிகள்,' என, மொத்தம், 2,293 பேர் தேர்வு எழுதினர். அதில், 'மாணவர்கள், 946, மாணவிகள் 998,' என, மொத்தம், 1.944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும், 1.77 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தமட்டில், '2,990 மாணவர்கள், 3,416 மாணவிகள்,' என, மொத்தம், 6,406 பேர் தேர்வு எழுதினர். அதில், 'மாணவர்கள், 2,622, மாணவிகள், 3,231,' என மொத்தம், 5,853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், 1.23 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

