/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை வஸ்துக்கள் விற்றால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
/
போதை வஸ்துக்கள் விற்றால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
போதை வஸ்துக்கள் விற்றால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
போதை வஸ்துக்கள் விற்றால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2024 01:51 AM
ஊட்டி;'போதை வஸ்துக்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் கஞ்சா மற்றும் உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. 'போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும்,' என, மாநில அரசு போலீசாருக்கு உத்தரவிட்டது.
கஞ்சா போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்கும் வகையில், வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. ரூரல் டி.எஸ்.பி., விஜய லட்சுமி வகித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 'கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வியாபாரிகள் எக்காரணத்தை கொண்டும் விற்பனை செய்ய கூடாது.
போதை பொருட்கள் குறித்த சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட, 18 வயது உட்பட்டவர்களுக்கு பீடி சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க வியாபாரிகளும் முன்வர வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ., செல்வன் உட்பட மஞ்சூர் வியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.