/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரம் இல்லாத சாலை பணி; மக்கள் வாக்குவாதம்
/
தரம் இல்லாத சாலை பணி; மக்கள் வாக்குவாதம்
ADDED : பிப் 21, 2025 10:46 PM
குன்னுார்; குன்னுார், 3வது வார்டில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த டி.டி.கே., சாலையில், 73 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாலை பணிகளில், தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், ' இங்கு சில இடங்களில் உயரம் குறைவாக தார் போடப்பட்டுள்ளதால், மழை காலங்களில் சாலை பெயர்ந்து விடும் நிலை உள்ளது.
மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, இப்பகுதியில் தரமான முறையில் செப்பனிடவும், பழைய கவுடர் டாக்கீஸ் பகுதியில் வாகனம் செல்லாத இடத்தில் நகராட்சியால் அமைக்கப்படும் சாலை பணிகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

