/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சாலை ஓரத்தில் பள்ளம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
/
கிராம சாலை ஓரத்தில் பள்ளம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
கிராம சாலை ஓரத்தில் பள்ளம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
கிராம சாலை ஓரத்தில் பள்ளம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
ADDED : மார் 14, 2025 10:17 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்ட பெட்டு - கக்குச்சி இடையே, சாலை ஓரத்தில் தளம் அமைக்காததால், வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி கட்டபட்டு பஜாரில் இருந்து, தும்மனட்டி சாலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில், அரசு பஸ்கள், தேயிலை தொழிற்சாலை லாரிகள், பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது.
சீரமைக்கப்பட்ட சாலையில், வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. சீரமைக்கப்பட்ட சாலை ஓரத்தில், தளம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்கும் போது, சிரமம் அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் குடியிருப்புகள் உள்ளதால், வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை, சாலை ஓர குழியை நிரப்பி, கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.