/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை
/
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை
ADDED : மே 15, 2024 12:23 AM

கூடலுார்;கூடலுாரில், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, மருத்துவ சுகாதார துறை மற்றும் நகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை தடுக்க, 'மருத்துவ சுகாதாரத் துறையினர், கூடலுார் நகராட்சி உதவியுடன், வீடுகள், பொது இடங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து, தண்ணீர் தேங்குவதை தடுப்பது; கொசு மருந்து அடிப்பது,' உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கூடலுார் பகுதியில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. எனினும், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க பெரும்பாலான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.

