/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்ளாட்சிகளில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்; தயார் நிலையில் வைக்க உத்தரவு

ADDED : ஆக 02, 2024 05:37 AM

ஊட்டி : உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழையால் மலை பயிர்கள், வீடுகள் சேதமானது. ஊட்டி, மஞ்சூர் பகுதிகள் என, மாவட்ட முழுவதும் ஆங்காங்கே பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது,
நீலகிரிக்கு கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
'ரெட்' அலர்ட் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நேற்று, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில், 32 பேர் கொண்ட மீட்பு வீரர்கள் ஊட்டி வந்தடைந்தனர். மீட்பு பணிகளுக்காக உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள், கூடலுார் மற்றும் குந்தா பகுதிகளுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், 4 நகராட்சி, 11 பேரூராட்சி மற்றும் 35 கிராம ஊராட்சிகளில் பேரிடம் மீட்பு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.