தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வரும் 16ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்

வரும் 16ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்

வரும் 16ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஆக 07, 2024 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி : ஊட்டியில் வரும், 16ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், வரும், 16ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இம்முகாமில், பல்வேறு பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

அதில், 'எட்டாம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் டிரைவர்கள்,' என, அனைத்து விதமான தகுதியாளர்கள் பங்கேற்கலாம்.

எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுனர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

வேலைநாடுனர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களும் முகாமில் பங்கேற்று, பணியாளர்களை தேர்வு செய்யலாம்.

மேலும், விபரங்களுக்கு, 0423--2444004, 72000 19666 எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us