ADDED : ஆக 10, 2026 05:31 PM
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள், ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்கிறது.
பந்தலுார் பகுதியில் எஸ்டேட் நிர்வாகத்தினர், தோட்ட தொழிலாளர்களை லாரிகளில் நிற்க வைத்து, மூட்டைகள் மீது அமர வைத்து,வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.வளைவான எஸ்டேட் சாலை பகுதிகளில், லாரிகள் சற்று நிலை தடுமாறினாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
இந்நிலையில், தற்போது, டிராக்டர்களில் அதிக அளவு உர மூட்டைகளை ஏற்றி கொண்டு, அதன் மீது அமர்ந்தும், படியில் நின்று கொண்டும் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கவலை கொள்ளாமல் தங்கள் பணி முடிந்தால் போதும் என்று இது போன்ற, ஆபத்தான பயணங்களை அனுமதிக்கின்றனர். எனவே, போலீசார் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
