/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை காட்டுக்குள் அழைத்து செல்லும் தனியார் வாகனங்கள் மாவட்ட கலெக்டர்; வனத்துறையிடம் புகார்

ADDED : ஆக 13, 2024 01:53 AM
ஊட்டி;'ஊட்டி பைக்காரா சுற்றுப்புற பகுதியில், காப்பு காட்டுக்குள் தனியார் ஜீப்புகள் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு பணி முடிந்ததை அடுத்து, பைக்காரா ஏரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மழை பொழிவால் அணை முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இங்குள்ள சில தனியார் வாகன ஓட்டுனர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அத்து மீறி அழைத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், மின்வாரியத்திற்கு சொந்தமான அணை பகுதி அருகே அழைத்து செல்வதும் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு பணியில் உள்ள வனத்துறையினர்; போலீசார் கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர், மாவட்டகலெக்டர்; வன அலுவலருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
நீலகிரி வனக்கோட்டஅலுவலர் கவுதம் கூறுகையில்,''பைக்காரா சுற்றுப்புற பகுதிகளில் காப்பு காட்டுக்குள் தனியார் ஜீப்புகள் செல்ல கூடாது என ஏற்கனவே கூறியுள்ளேன். மீண்டும் ஆய்வு செய்து, அங்கு இவ்வாறு நடக்குமானால் ஆய்வு செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.