/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை :அரசு பள்ளி மாணவியருக்கு பரிசு
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை :அரசு பள்ளி மாணவியருக்கு பரிசு
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை :அரசு பள்ளி மாணவியருக்கு பரிசு
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை :அரசு பள்ளி மாணவியருக்கு பரிசு
ADDED : மே 28, 2024 12:19 AM

கூடலுார்;கூடலுார், பொன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கூடலுார் பொன்னுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சாதித்த மாணவர்களுக்கு, உயர்ந்த உள்ளம் நண்பர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், இப்பள்ளியில் சாதித்து மாணவர்களுக்கு நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. பி.டி.ஏ., தலைவர் பத்மநாதன் வரவேற்றார். விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமை வகித்தார்.
விழாவில், நண்பர்கள் குழு தலைவர் அலெக்ஸ், சதன்ராஜ், சசிகுமார், ஜெகன், இளையராஜ், யோகராஜ் உள்ளிட்டோர், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர், பிரியதர்ஷினி, 5001 ரூபாய்; அனிதா, ஜீவிதா ஆகியோருக்கு தலா, 2001 ரூபாய்; ஸ்ரீதேவிக்கு 1501 ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
விழாவில், பி.டி.ஏ., துணைத் தலைவர் மதன், கிராமத் தலைவர் செல்வராஜ், மாரிமுத்து மேலாண்மை குழு நிர்வாகி ரகு உட்பட பலர் பங்கேற்றனர்.