/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
/
தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 05, 2025 10:13 PM

கூடலுார்; கர்நாடகாவில் இருந்து, கேரளாவுக்கு எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருள் கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கூடலுார் தொரப்பள்ளி வனச் சோதனை சாவடி பகுதியில், பிப்., 3ம் தேதி இரவு கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, கேரள சென்ற அரசு பஸ்சில் சோதனை செய்து, கேரளா பாண்டிக்காடு மேலாட்டு பகுதியை சேர்ந்த முகமது சபீர், 32, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., என்ற விலை உயர்ந்த, 600 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
அதன்மதிப்பு, 24 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, முகமது சபீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நீலகிரி எஸ்.பி., நிஷா, கலெக்டர் லட்சுமி பவ்யாவுக்கு பரிந்துரை செய்தார்.
அந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, கூடலுார் போலீசார் வழங்கினர்.