/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தை திருமண தடை சட்டம் பெற்றோர் மீது வழக்கு பதிவு
/
குழந்தை திருமண தடை சட்டம் பெற்றோர் மீது வழக்கு பதிவு
குழந்தை திருமண தடை சட்டம் பெற்றோர் மீது வழக்கு பதிவு
குழந்தை திருமண தடை சட்டம் பெற்றோர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 21, 2024 12:30 AM
கூடலுார்:கூடலுார் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக, கணவர் மற்றும் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூடலுார் அருகே, பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமிக்கும், 30 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு ஆக., மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனை சென்றுள்ளார்.
பரிசோதனையில், 18 வயது சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியின் பெற்றோர், அவரின் கணவர் மற்றும் அவரின் பெற்றோர் மீது, குழந்தைகள் திருமண தடைச் சட்டம்; போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.