/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
/
தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 31, 2024 11:36 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குந்தலாடி சிவன் காலனி அமைந்துள்ளது. இங்கு, 150கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்புகளுக்கு செல்ல ஊராட்சி மூலம் சிமென்ட் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
அங்குள்ள சாலையோர மண் திட்டு மழையில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மூலம், 10.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கழிவுநீர் கால்வாயுடன் கூடிய தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை அகற்றிவிட்டு, அதில் கால்வாய் மற்றும் தடுப்பு சுவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் பணி நேற்று நடந்தது.
மக்கள் மறியல்
இதனால், கோபமடைந்த பொதுமக்கள் நேற்று காலை குந்தலாடி பஜாரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ. அசோக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் சற்குணசீலன், ஜோஸ் குட்டி உள்ளிட்டோர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் கூறுகையில்,'தற்போதைக்கு பணியை நிறுத்தி வைக்கவும், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் நேரில் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்காத வகையில் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் காலை, 8:-30 மணிக்கு மறியலை கைவிட்டனர். போராட்டத்தால், தமிழக -கேரளா செல்லும் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டன.

