/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவ ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மருத்துவ ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2024 01:44 AM

அன்னுார்;கோல்கட்டாவில், பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து, அன்னுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோல்கட்டாவில், பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, அன்னுாரில் அரசு மருத்துவமனை வளாகத்தில், நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தனியார் மருத்துவமனை டாக்டர் மஞ்சுளா தலைமை வகித்தார். இந்திய மருத்துவ கழக நிர்வாகி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். முதுநிலை மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும், அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.