/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாசடைந்த குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு
/
மாசடைந்த குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஆக 20, 2024 02:03 AM
பந்தலுார்:சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில், மாசடைந்த குடிநீர் வினியோகத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் அருகே கோரஞ்சால் டவர் லைன் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர், மஞ்சள் நிறத்தில் மாசடைந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், எருமாடு பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், இப்பகுதி மக்கள் மாசடைந்த குடிநீருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஊராட்சி அலுவலகம் அருகே இதுபோன்ற நிலை தொடர்வது குறித்து, மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ள மறுப்பது வேதனை அளிப்பதாக, மக்கள் ஆதங்கப்பட்டனர்.ஊராட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'இதுகுறித்து உடனே ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

