/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் நகராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
/
கூடலுார் நகராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஆக 06, 2024 05:51 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் மனோகரன், கோவை வடக்கு துணை வட்டாட்சியர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், ஜாதி மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 575 மனுக்களை பெற்றார்.
இம்முகாம் குறித்து கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில்,நகராட்சிக்கு உட்பட்ட கேஸ் கம்பெனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் கலந்து கொள்ளும் மக்கள் தொடர்பு முகாம் ஆக., 14ம் தேதி நடக்கிறது.
இதற்காக கூடலூர் வடக்கு மற்றும் தெற்கு வருவாய் கிராமங்கள் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.
முகாமில், பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் கல்பனா, மருதாசலம், நகராட்சி உறுப்பினர்கள் கவிதா ராணி, முருகானந்தம், துரை செந்தில், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.